ETV Bharat / state

விலையில் புதிய உச்சம் தொட்ட கனகாம்பரம், சம்பங்கி பூ

ஈரோடு: திருமண சீசனை அடுத்து கனகாம்பரம், சம்பங்கி பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

விலையேற்றம்
விலையேற்றம்
author img

By

Published : Aug 21, 2020, 3:38 AM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு மல்லி, முல்லை, சம்பங்கி பூக்கள் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.

கரோனா பாதிப்புக்கு பின் தற்போது பூக்கள் விற்பனை ஏறுமுகமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக கிலோ ரூ. 10க்கு விற்கப்பட்ட சம்பங்கி பூக்கள் சற்று உயர்ந்து ரூ. 20ஆகவும், அதைத் தொடர்ந்து 120ஆக அதிகரித்து நேற்று (ஆகஸ்ட் 20) உச்சகட்டமாக கிலோ ரூ. 220ஐ தொட்டது. இது கடந்த 6 மாதத்தில் அதிகபட்ச விலை ஏற்றம் என விவசாயிகள் தெரிவித்தனர்.

சம்பங்கி வரத்து குறைந்ததாலும் திருமண சீசன் என்பதால் பூமாலைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் திடீர் விலையேற்றம் என கூறப்படுகிறது. சத்தியமங்கலம் மலர்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் வியாபாரிகள் ஒரு டன் சம்பங்கி பூக்கள் கிலோ ரூ. 220க்கு ஏலம் எடுத்துள்ளனர். அதே போல கன்காம்பரம் கிலோ ரூ. 250க்கு விற்கப்பட்ட நிலையில் கிலோ ரூ.1,100ஆக உயர்ந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.