பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு கடந்த 5ஆம் தேதி கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி உலகம் முழுவதிலுமுள்ள பல இசை ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம், மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த கமல் ரசிகர்களும், பொதுமக்களும் இணைந்து, கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முன்னதாக, நேற்று (ஆக. 21) திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனை ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.