ETV Bharat / state

இரண்டு நாள்கள் விசாரணைக்குப்பிறகு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி நீதிமன்றத்தில் ஆஜர்!

ஈரோட்டில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி யாசிப் முஷபீனை இரண்டு நாள்கள் காவல் விசாரணைக்குப்பின்பு, துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Etv Bharat நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி

author img

By

Published : Aug 10, 2022, 5:42 PM IST

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்த யாசிப் முஷபீனை கடந்த மாதம் அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீட்டிற்குள் நுழைந்து விசாரணை நடத்தியபோது, வீட்டில் இருந்த தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன், லேப்டாப், டைரிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ் புக் உள்ளிட்ட ஆவணங்களைக்கைப்பற்றினர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நுண்ணறிவுப்பிரிவு காவல் துறையினர், ஈரோடு நீதிமன்றத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி யாசிப் முஷபீனை 5 நாள்கள் விசாரணை நடத்த அனுமதிகோரி இருந்தனர். இதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து, துப்பாக்கி ஏந்திய பலத்த காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி யாசிப் முஷபீனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, யாசிப் முஷபீனை இரண்டு நாள்கள் காவல் துறையினர் விசாரணை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். இதனையடுத்து காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து, யாசிப் முஷபீனிடம் விசாரணை நடத்த அழைத்துச்சென்றனர்.

இரண்டு நாள்கள் விசாரணைக்குப்பின்பு காவல் துறையினர் அரசு மருத்துவமனையில் யாசிப் முஷபீன் உடலை பரிசோதனை மேற்கொண்டு பின்பு மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகேசன் முன்பு ஆஜர்படுத்தினர். யாசிப் முஷபீனை இந்த மாதம் 24ஆம் தேதி வரையில் சிறைக்காவலில் வைக்க நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து யாசிப் முஷபீன் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி

இதையும் படிங்க: பெட்ரோல் பங்க் டீலர்ஷிப் வாங்கித்தருவதாகக்கூறி பண மோசடி செய்த இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.