ETV Bharat / state

அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் கல்வி கிடைக்கிறதா, கல்வி கற்கும் உரிமை பாதுகாக்கப்படுகிறதா? - ஆன்லைன் கல்விக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு

தொழில்நுட்ப உலகில் முழுவீச்சில் இயங்கிக் கொண்டிருக்கும் நம் நாட்டில் முன்னர் பண பரிவர்த்தனை ஆன்லைன்மயமாக்கப்பட்டபோது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால், நாளடைவில் மக்கள் கூகுள் பே, பேடிஎம் எனப் பழகிவிட்டனர். அது போல ஆன்லைன் கல்வி வழக்கத்திற்கு வரும் என்றால் பள்ளிகளை மாணவர்கள் மறந்துவிடும் சூழல் உருவாகிவிடும். அப்படி உருவாகாமல் ஆன்லைன் வகுப்பு தற்காலிக ஏற்பாடாக மட்டுமே இருக்க வேண்டும்.

பாடங்களைப் பதிவு செய்யும் காட்சி
பாடங்களைப் பதிவு செய்யும் காட்சி
author img

By

Published : Aug 27, 2020, 2:03 AM IST

Updated : Aug 27, 2020, 12:05 PM IST

கரோனா இந்தியப் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி என அனைத்துத் துறைகளையும் ஆட்டம் காணவைத்தது. இந்தியாவில் பெரும்பாலான மாணவர்களுக்குப் பள்ளி சென்று கல்வி கற்பதிலேயே சிக்கல் இருக்கும் நிலையில், கரோனா பரவல் ஆன்லைன் கல்வி பரவலாக்கியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஆன்லைன், தொலைக்காட்சிகள் வழியாகப் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று அறிவித்தது. இதற்குப் பலதரப்பிலிருந்து விமர்சனங்கள் வரத்தொடங்கின. தாமரை இலையில் தண்ணீர் போல பல மாணவர்கள் கல்வியைப் பட்டும்படாமல் பெற்றுக் கொண்டிருக்கின்றனர். மாநிலத்தில் மதிய உணவுக்காகவும் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் நிலை தற்போது அதனின் கொடுமை.

வீட்டிற்குள்ளேயே நாள் முழுக்க செல்போனும் கையுமாக இருக்கும் குழந்தைகளுக்கு உடல், மனரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது எனத் தெரிவிக்கின்றனர் பெற்றோர். ஆனால் சில குழந்தைகளுக்கு செல்போன் வசதியும் கிடையாது.

ஒரு வீட்டில் ஒரே ஒரு செல்போனும் இரண்டு குழந்தைகளும் இருக்கும்பட்சத்தில் ஒருவரின் கல்வி கேள்விக்குறியாகிறது. செல்போனே இல்லாத பட்சத்தில் குழந்தைகளின் கல்வி முற்றிலும் பறிபோய்விடுகிறது.

கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பள்ளியின் நேரடிக் கல்வியைப் புரிந்துகொள்வதே சிக்கலாக இருக்கும் நிலையில் தற்போது அவர்கள் ஆன்லைன் கல்வியை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் திணறிவருகின்றனர். இது தொடர்பாக சில பெற்றோரிடம் பேசினோம்.

“எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும்போது அவர்கள் படிப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைன் கல்வியின்போது அவனுடன் பயணிக்க முடியவில்லை. ஒருவேளை நான் வேலையாகச் சென்றுவிட்டால் அப்போது அவன் படிப்பான என்றும் எனக்குத் தெரியாது.

12ஆம் வகுப்பு கல்வியை இப்படி ஆன்லைன் வழியாக கற்றுக் கொள்ளும் அவனுடைய உயர் கல்வி என்னவாகும். எதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும்; எப்படி அவன் தேர்வுகளை எதிர்கொள்வான்” என மகனின் எதிர்காலம் குறித்து புலம்புகிறார் யுவராணி.

குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்க கூடாது, செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று சொல்லி வளர்த்த காலம் மலையேறி தற்போது அவர்களுக்கு நாமே மொபைல் கொடுக்கும் காலம் வந்துவிட்டதாகவும் யுவராணி அங்கலாய்க்கிறார்.

பாடங்களைப் பதிவு செய்யும் காட்சி
பாடங்களைப் பதிவு செய்யும் காட்சி

குழந்தைகள் அதிக நேரம் மொபைலை உற்றுநோக்கும்போது பார்வை பிரச்னை, தலைவலி, தேவையற்ற மன அழுத்தம், விளையாட்டு உணர்வு இல்லாதது போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இந்தப் பொருளாதார நெருக்கடியான சூழலில்கூட குழந்தைகளுக்குத் தனியாக செல்போன் வாங்கித்தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது வெறுமனே செல்போனோடு நிற்பதில்லை. இதற்கு இணைய வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதிருக்கிறது. மின்சார கட்டணத்தைவிட செல்போன் பில்தான் அதிகரித்துள்ளது.

இப்படியாக ஆன்லைன் வகுப்பில் கற்றுக் கொள்ளும்போது இரண்டு வகையான பின்னடைவுகள் ஏற்படுகின்றன. ஒன்று எல்லாமே மொபைலில் இருக்கும்போது ஏன் எழுத வேண்டும் என்ற அலட்சியம், இன்னொன்று புத்தகம் படிக்கும் பழக்கம். இந்த இரண்டும்தான் குழந்தைகளின் ஞாபகச் சக்தியை அதிகரிக்கும் என்ற நிலையில் ஆன்லைன் வகுப்புகள் குழந்தைகளுக்கு ஏற்றதுதானா? என தனியார் ஆசிரியையிடம் கேட்டோம்.

“பள்ளியில் ஆசிரியர் என்ன பாடம் நடத்துகிறார் என்று பெற்றோர்களுக்குத் தெரியாது. ஆனால் தற்போது அவர்களும் குழந்தைகளுடன் சேர்ந்து அறிந்துகொள்ள முடியும்.

பள்ளிகள் திறக்காமல் மாணவர்கள் வீட்டில் இருந்தாலும், மொபைலை கேம் விளையாட அல்லாமல் படிக்க பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்ப ரீதியில் கற்றுக்கொள்ளும் ஆற்றலை ஆன்லைன் வகுப்புகள் மூலம் குழந்தைகள் வளர்த்துக்கொள்கின்றனர்.

ஆசிரியர்
ஆசிரியர்

தனது பாடத்தை விரைந்து முடித்துக்கொடுக்கும் பொறுப்பும், எதிர்காலத்தில் எந்தவித சூழலையும் சமாளிக்கும் திறனும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது” என்கிறார் ஆசிரியர் ரம்யா.

ஸ்மார்ட்போன் இல்லாத மாணவர்களுக்கு பாடங்கள் தொலைக்காட்சி வழியாகக் கற்றுக்கொள்ள வசதியாக பென் டிரைவில் கொடுக்கப்படுவதாக ரம்யா தெரிவிக்கிறார். ஆனால், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் தெரிவிக்கும் சில விஷயங்கள் நமக்கு அதிர்ச்சி அளிக்கின்றது.

அவர் கூறுகையில், “இன்றும் பல கிராமங்களில் மின்சாரமே இல்லாத சூழலில் ஆன்லைன் கல்வி மாணவர்களை வஞ்சிக்கக்கூடிய செயல். அது ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வியை எட்டாக்கனியாக்கும் செயல்தானே அன்றி வேறல்ல. இந்தியாவில் 30 விழுக்காடு மாணவர்களுக்கு இணையதள வசதி இல்லாத சமயத்தில் திடீரென இணைய வழியில் கல்வி என்பது நியாமானதல்ல.

வகுப்பறைக்கு மாற்று ஆன்லைன் கல்வி கிடையாது. அனைத்துப் பகுதிகளிலும் ஆன்லைன் கல்வி என்பது நிச்சயமாக சாத்தியம் கிடையாது. இது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒருபோதும் பயன்படாது. மேலும் ஆன்லைன் கல்வி மூலம் மாணவர்களின் கல்வி உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்படுகிறது என்பதே உண்மை. கல்விக்கு அதிகளவில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு இந்த இக்கட்டான சூழலில் ஆன்லைன் கல்வி கதவை திறந்துவிட்டுள்ளது” என்றார்.

கல்வி கற்கும் உரிமை பாதுகாக்கப்படுகிறதா?

கல்வியில் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசாக மத்திய, மாநில அரசுகள் உள்ளதாக மாரியப்பன் தெரிவிக்கிறார். ஒருசாரர் மட்டும் கல்வி உரிமையை பெறுவது ஜனநாயகத்தன்மை இல்லை என்பதே பெரும்பாலானோரின் ஒருமித்த கருத்தாக உள்ளது. மேலும், ஆன்லைன் கல்விக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைத்து பள்ளிக் கல்வி அளிக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:ஆன்லைன் கல்வி, கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு ஏற்றதா?

Last Updated : Aug 27, 2020, 12:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.