நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான வலிமை திரைப்படம் நீண்ட நாட்களாக வெளியாகமல் இருந்த நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியானது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் உள்ள திரையரங்குகளில் வலிமை திரைப்படம் திரையிடப்பட்டது. முதல் காட்சி அஜித் ரசிகர்களுக்கான ரசிகர் காட்சியாக திரையிடப்பட்டது. அதிகாலை முதலே திரையரங்குகள் முன்பு கூடிய அஜித் ரசிகர்கள் மேளதாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதில் விபத்தால் காயமடைந்த அஜித் ரசிகர் ஒருவர் ஊன்று கோலுடன் தன் நாயகனின் திரைப்படத்தைக் காண வந்தார். அதைக் கண்டு நெகிழ்ச்சியடைந்த அஜித் ரசிகர்கள்,அவரை உற்சாகத்துடன் வரவேற்று அழைத்து சென்றனர். மகிழ்ச்சியுடன் திரையரங்கிற்குள் திரைப்படத்தை காண உற்சாகத்துடன் சென்றனர்.
திருச்சியில் வலிமை திருவிழா
திருச்சி மாநகரில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வலிமை வெளியிடப்பட்டுள்ளது.இன்று மட்டும் 50க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்படுகிறது. மேலும் நாளை(பிப்.25) முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் 5 காட்சிகள் திரையிடப்படுகிறது. அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல் ஆகி உள்ளது. இன்று அதிகாலை, முதல் காட்சியை காண்பதற்காக அஜித் ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:வலிமைப் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு..!