ETV Bharat / state

தாளவாடி அருகே வாகன ஓட்டிகளை துரத்திய காட்டு யானைகள்!

ஈரோடு: தாளவாடி அருகே சிக்கள்ளி சாலையில் வாகன ஓட்டிகளை துரத்திய காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

தாளவாடி அருகே வாகன ஓட்டிகளை துரத்திய காட்டுயானைகள்!

author img

By

Published : Jan 3, 2021, 10:41 AM IST

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, தலமலை, கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான யானைகள் நடமாடுகின்றன. குடிநீர் தேடி யானைகள் தாளவாடி சிக்கள்ளி சாலையை கடந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், தாளவாடி அடுத்த நெய்தாளபுரம் கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் தாளவாடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சிக்கள்ளி அருகே குறுக்கே வந்த யானைகள் வாகன ஓட்டிகளை துரத்தின. அப்போது வனச்சாலையில் உள்ள வேகதடை மீது ஏறி செல்லும்போது இருசக்கர வாகனம் பழுதாகி நின்றது. இதனால் வாகனத்தை அதே இடத்தில் வைத்து விட்டு தப்பினர்.

தாளவாடி அருகே வாகன ஓட்டிகளை துரத்திய காட்டுயானைகள்!

அப்போது அவ்வழியாக யானைக்கூட்டம் காட்டுக்குள் சென்றதை கிராம மக்கள் உறுதி செய்த பிறகு, இருசக்கர வாகனத்தை மீட்டனர். தாளவாடி சிக்கள்ளி இடையே போக்குவரத்து அதிகளவில் உள்ள நிலையில், பட்டப் பகலில் வாகன ஓட்டிகளை யானை கூட்டம் துரத்திய சம்பவம் மலைகிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க...'வடகலை, தென்கலை பிரிவினர் கோயிலில் வாதங்கள் செய்யக்கூடாது' - இந்து அறநிலையத்துறை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.