ETV Bharat / state

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: விவசாயி கைது! - யானை உயிரிழப்பு

ஈரோடு: மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்த சம்பவத்தில் முன்ஜாமீன் பெற வழக்கரைஞர் அறையில் இருந்த விவசாயியை வனத்துறையினர் கைது செய்தனர்.

மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: விவசாயியை கைது!

author img

By

Published : Dec 24, 2020, 2:51 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஜீரஹள்ளி வனச்சரகத்தில் அருள்வாடி வனக்கிராமம் உள்ளது. வனத்தை ஒட்டியுள்ள இக்கிராமத்தில் யானைகள் அடிக்கடி புகுந்து வாழை, சோளப்பயிர்களை சேதப்படுத்தி வந்தது.

இங்குள்ள, பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி காளையா என்பவர் தோட்டத்தில் ராகி, சோளம் பயிரிட்டிருந்தார். யானை தினந்தோறும் தோட்டதில் புகுந்து பயிரைச் சேதப்படுத்தியதால், கவலை அடைந்த விவசாயி காளையா யானை வருவதை தடுக்க மின்வேலி அமைத்துள்ளார். இந்த மின்கம்பத்தில் இருந்து மின்சாரத்தை திருடி இரவு நேரத்தில் வேலியில் பாய்ச்சியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி வழக்கம்போல் மக்காச்சோளப்பயிரை சேதப்படுத்த வந்த யானை மின்வேலியை தொட்டபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதைப்பார்த்த விவசாயி காளையா, பாதுகாப்புக்காக பிணை பெறுநோக்கில் வழக்குரைஞர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தார்.

இதற்கிடையில், தலைமறைவான காளையாவை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன் பிணை பெற இருந்த காளையாவை வழக்குரைஞர் அறையில் வைத்து வனத்துறையினர் கைது செய்தனர்.

பின்னர், ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைந்தனர். இங்கு, இந்தாண்டில் 3ஆவது முறையாக மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...3ஆவது முறையும் ஆட்சி அமைப்போம்: ஈபிஎஸ்-ஓபிஎஸ் உறுதி ஏற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.