ETV Bharat / state

கரோனா தொற்று பாதித்த தாயை வீட்டுக்குள் அனுமதிக்காத மகள்!

author img

By

Published : May 15, 2021, 7:39 PM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினரே வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து வெளியேற்றிய சம்பவம், ஈரோட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

in-erode-a-daughter-did-not-allowed-his-mother-into-house-who-tested-covid-positive
கரோனா தொற்று பாதித்த தாயை வீட்டுக்குள் அனுமதிக்காத மகள்

ஈரோடு: புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி கே.வி.கே.சாமி வீதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், கணவனை இழந்த மூதாட்டி அதே பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவை மாவட்டம், அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, வீட்டிற்கு வந்த மூதாட்டியை, கரோனா தொற்று இருப்பதால் அவரது மகளும் மருமகனும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து வீட்டின் வாசல் முன்பு அமர்ந்து அவர் காத்திருக்கத் தொடங்கினார். அக்கம்பக்கத்தினரும் அவர் அருகில் செல்ல அச்சப்பட்ட நிலையில், இதுகுறித்து தகவலறிந்து வந்த புளியம்பட்டி நகராட்சி அலுவலர்கள், மூதாட்டிக்கு உணவு வழங்கி, அவரது குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அவரது மகளும் மருமகனும் பிடிவாதமாக மூதாட்டியை வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து புளியம்பட்டி காவல் நிலையத்துக்கு நகராட்சி அலுவலர்கள் தகவல் அளித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்று காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, இரவு மட்டும் தங்க அனுமதிக்குமாறும், காலை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் எனவும் உறுதியளித்ததை அடுத்து இருவரும் மூதாட்டியை வீட்டிற்குள் அனுமதித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், இன்று (மே.15) ஆம்புலன்ஸ் மூலம் மூதாட்டியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சொந்த மகளே கரோனா பாதித்த நபரை வீட்டுக்குள் அனுமதிக்காதது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பரிசோதனை செய்யாமல் சிகிச்சைப் பெற வருவதைத் தவிர்க்க வேண்டும் - அமைச்சர் முத்துசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.