ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புங்கம்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விளைநிலத்தில் கும்பல் சட்டவிரோதமாக மண்ணை லாரிகளில் திருடி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 28) அந்த இடத்தில் சிலர் மண்ணை லாரிகளில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் அந்தக் காட்சியை செல்போனில் படம் பிடிக்க முயன்றபோது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக மாவட்ட அலுலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: தடையை மீறி மஞ்சுவிரட்டு: காவலர்களைப் பார்த்து ஓட்டம் பிடித்த வீரர்கள்!