அகில இந்திய பயங்கரவாத தடுப்பு முன்னணி அமைப்பின் தலைவர் மணிந்தர்ஜித் சிங் பிட்டா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்படும் தனியார் பின்னலாடை நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வடமாநில தொழிலாளர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு, அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து மணிந்தர்ஜித் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பிரதமர் மோடி இந்தியாவின் பிரதமராகபொறுப்பேற்றது முதல் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு தீவிரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுவருகின்றன. ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம் அம்மாநில மக்களின் வாழ்வாதார நிலை உயரும். தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்லது” என்றார்.