ETV Bharat / state

''பர்கூர் வனப்பகுதியில் சரணாலயம் அமைக்கப்பட்டால் மலைவாழ் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும்'' - செங்கோட்டையன் - ஈரோடு பர்கூர் மலையில் உள்ள பழங்குடியினர்

அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் சரணாலயம் அமைக்கப்பட்டால் மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பாதிக்கப்படும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 6, 2023, 8:03 PM IST

செங்கோட்டையன் பேச்சு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனப்பகுதி விலங்குகள் சரணாலயமாக மாற்றப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஜூலை 06) பர்கூர் மலைப்பகுதியில் தாமரை கரையில் அதிமுகவின் சார்பில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் உள்பட கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் வனவிலங்குகள் சரணாலயம் அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''பர்கூர் வனப்பகுதியில் சரணாலயம் அமைக்கப்பட்டால் மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். தமிழ்நாடு - கர்நாடக மாநிலம் இடையேயான உற்பத்தி செய்யப்படும் விவசாய விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் பழங்குடியின மக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படும்'' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் சட்ட பரிசீலனையில் உள்ளது: ஆளுநர் மாளிகை விளக்கம்!

தொடர்ந்து, ''மலைவாழ் கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமற்ற பொருள்களை வழங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பர்கூர் மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரி செய்து, மலை கிராமப் பள்ளிக்கு ஆசிரியர்கள் சென்று வர போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்'' என வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், ''தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். தொடர்ந்து 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று கோட்டையில் அமருவார்'' என நம்பிக்கைத் தெரிவித்தார்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிமுக எழுச்சி மாநாடு இந்தியாவை திரும்பிப் பார்க்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒருங்கிணைந்த அதிமுகவாக உள்ளது என நிரூபிக்கும் வகையில் மாநாடு அமையும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எல்லோருக்கும் கல்வி கிடைக்கும் வகையில் துறையில் தோல்வி ஏற்படாமல் செயல்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: Maamannan:தனபால் இல்ல விருந்தை புறக்கணித்த ஈபிஎஸ்? மாமன்னன் குறித்து பேசுவதா..? - அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.