ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை மேகங்கள் கறுத்து குளிர்ந்த காற்று வீசியது. அதன்பின், ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மலைகிராமங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மழை பெய்ததால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.