ETV Bharat / state

தலமலை வனப்பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளநீர்!

author img

By

Published : Sep 24, 2019, 8:33 AM IST

ஈரோடு: தலமலை வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

erode

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இதனால் தலமலை, சிக்கள்ளி, தொட்டபுரம் பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளநீர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்றதால் தலமலை-தாளவாடி இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வெள்ளத்தில் மரம், செடி, கொடிகளுடன் உயிரினங்களும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். வெள்ளநீரில் ஆபத்தான பயணம் வேண்டாம் என எச்சரிக்கப்பட்டதால் காய்கறி வாகனங்கள், பள்ளி வாகனங்கள் தண்ணீர் வடியும்வரை காத்திருந்தன. சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வெள்ளநீர் மெள்ள மெள்ள வடியத் தொடங்கியது.

Heavy Rain at Erode

இருப்பினும் இருசக்கர வாகனங்கள் முதலில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தலமலை-தாளவாடி இடையே இயக்கப்பட்ட அரசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் வெள்ளம் வடியும்வரை காத்திருந்து சென்றது. அப்போது பயணிகள் உற்சாகத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்

Intro:Body:tn_erd_04_sathy bus_flood_transport_vis_tn10009

தலமலை வனப்பகுதியில் பலத்த மழை: தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்ற காட்டாற்று வெள்ளம்: 2 மணிக்கு பிறகு வெள்ளம் வடிந்து போக்குவரத்து துவங்கியது

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் நள்ளிரவில் முதல் பலத்த மழை பெய்தது. இதனால் தலமலை, சிக்கள்ளி, தொட்டபுரம் பகுதியில் உள்ள ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காட்டாற்று வெள்ளநீர் தரைபாலத்தை மூழ்கடித்தபடி சென்றதால் தலமலை மற்றும் தாளவாடி இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் மரம் செடி கொடிகளுடன் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். வெள்ளநீரில் ஆபத்தான பயணம் வேண்டாம் என எச்சரிக்கப்பட்டதால் காய்கறி வாகனங்கள், பள்ளி வாகனங்கள் தண்ணீர் வடியும் வரை காத்திருந்தன. சுமார் 2 மணிநேரத்துக்கு பிறகு வெள்ளநீர் மெல்ல மெல்ல வடியத் துவங்கியது. இருப்பினும் இரு சக்கர வாகனங்கள் முதலில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தலமலை மற்றும் தாளவாடி இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் வெள்ளம் வடியும் காத்திருந்து வெள்ளநீரில் மிதந்து சென்றது. அப்போது பயணிகள் உற்சாத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.