ETV Bharat / state

திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்: ஊர்ந்து செல்லும் வாகனங்கள் - Fog on the hillside

ஈரோடு : திம்பம் மலைப்பாதையில் காலை நேரத்தில் நிலவும் பனிமூட்டத்தால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பனிமூட்டம் நிறைந்து காணப்படும் திம்பம் மலைப்பாதை

author img

By

Published : Jan 5, 2021, 12:54 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு - கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே 24 மணி நேரமும் பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்ததினால், காலை முதலே திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் மலைப்பகுதியில் பயணிக்கும் வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மெதுவாக ஊர்ந்து செல்வதோடு, மலைப்பாதையை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

பனிமூட்டம் நிறைந்து காணப்படும் திம்பம் மலைப்பாதை

அதுபோல திம்பம், ஆசனூர், தலமலை பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் மக்கள் தீமூட்டி வெப்பம் ஏற்றி தங்கள் உடலை சூடாக்கிக்கொள்கின்றனர். பனிமூட்டம் நிலவுவதால் இருமாநிலங்களுக்கு இடையே பயணிக்க கூடுதல் நேரம் ஆகிறது என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னை, புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை - மக்கள் அவதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.