ETV Bharat / state

ஓடும் பேருந்தில் மாரடைப்பு - உயிர் பிரியும் போதும் பயணிகளை காத்த ஓட்டுநர்

கோபிசெட்டிப்பாளையம் அருகே மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் நேரத்திலும், பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகளின் உயிரை ஓட்டுனர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bus driver
ஓட்டுநர்
author img

By

Published : Jul 12, 2021, 7:22 AM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே மணியங்காட்டூரை சேர்ந்தவர் செல்வராஜ் (52). கவுந்தப்பாடி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் வழக்கம்போல் இன்று (ஜூலை11) கவுந்தப்பாடியில் இருந்து பெருந்துறை நோக்கி பேருந்தை இயக்கினார்.

வெள்ளாங்கோவில் வழியாக செல்லும்போது, அங்கிருந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் புறப்பட்டார். சிறிதுதூரம் சென்றவுடன் ஓட்டுநர் செல்வராஜூக்கு மயக்கம் ஏற்பட்டதால், சமயோசிதமாக யோசித்து பேருந்தை மெதுவாக சாலையோரம் நிறுத்தினார்.

அப்போது சுயநினைவை இழந்த செல்வராஜை மீட்ட நடத்துநர் கனகசபாவும், பயணிகளுங்ம அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழந்த ஓட்டுநருக்கு பாக்கிய லட்சுமி என்ற மனைவியும் மகளும், மகனும் உள்ளனர்.

இதையும் படிங்க: நடுவழியில் கழன்று ஓடிய பேருந்து டயர்... சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.