ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தனியார் யோகா மைங்களின் சார்பில் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்கான யோகா போட்டி நடைபெற்றது. இந்த யோகா போட்டியில், ஒரு ஆசனத்தில் நீண்ட நேரம் உள்ள சிறுவர்கள் யார் என்பதை கண்டறியும் போட்டியாக நடைபெற்றது.
இதில்,பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 17 சிறுவர், சிறுமியர் பங்கேற்று கர்பாசனம், கால பைரவி, ராஜகபோடசனம், ஓம்காராசனம், உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை நீண்ட நேரம் செய்தனர்.
இதில் நித்தி என்ற சிறுமி கர்பாசனத்தில் 15.02 நிமிடங்களும், ஸ்ரீநிதி என்ற சிறுமி ராஜகபோடசனத்தில் 8.02 நிமிடங்களும் யோகா செய்து சாதனைப் படைத்தனர்.
அதேபோல, லோகிதா மற்றும் ஜனோஸ் ஆகிய இருவரும் யோகநித்ராசனத்தில், 11.04 நிமிடங்களும், அனீத்குமார் என்ற சிறுவர் பர்ச்சுவசர்வாங்காசனத்தில் 15.11 நிமிடங்களும் யோகா செய்து சாதனை புரிந்துள்ளனர்.