ETV Bharat / state

பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் 30 சவரன் தங்க நகை திருட்டு

author img

By

Published : Feb 24, 2021, 9:47 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் பெண்களிடம் இருந்து 30 சவரன் தங்க நகை திருடுபோன சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. கோயிலில் 51 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு 8 கால பூஜைகள் நடைபெற்றன.

இதன் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று (பிப்.24) நடைபெற்றது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற்றன.

இவ்விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது பெண்களிடம் இருந்து 30 சவரன் தங்க நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர்.

இது தொடர்பாக சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோவிலில் வருடாபிஷேக விழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.