ETV Bharat / state

புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் 60 லட்சத்திற்கு விற்பனையான ஆடுகள்!

author img

By

Published : Apr 15, 2021, 6:31 PM IST

ஈரோடு: சித்திரைத் திருவிழாக்கள் தொடங்கியதால் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தையில் 500க்கும் மேற்பட்ட ஆடுகள் 60 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகின.

புஞ்சைபுளியம்பட்டி கால்நடை சந்தையில் ரூ. 60 லட்சத்திற்கு விற்பனையான ஆடுகள்

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டியில் உள்ள கால்நடை சந்தையில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தை

தமிழ்நாட்டில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சந்தையாக விளங்கும் புஞ்சை புளியம்பட்டி கால்நடை சந்தைக்கு, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, விவசாயிகளும் வியாபாரிகளும் வாங்கிச் செல்வர்.

இந்நிலையில், இன்று (ஏப். 15) புஞ்சை புளியம்பட்டி கால்நடைச் சந்தைக்கு வெள்ளாடு, செம்மறியாடு, ஆட்டுக்குட்டிகள் என 500க்கும் மேற்பட்ட ஆடுகளை விவசாயிகளும் வியாபாரிகளும் விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

60 லட்சத்திற்கு விற்பனையான ஆடுகள்

இங்கு ஆட்டுக்குட்டிகள் மூன்றாயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரையிலும், 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடுகள் ஆறாயிரம் ரூபாய் முதல் எட்டாயிரம் ரூபாய் வரையிலும், செம்மறியாடுகள் ஐந்தாயிரம் ரூபாய் முதல் ஏழாயிரம் ரூபாய் வரையிலும் விலை போனது. சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 500க்கும் மேற்பட்ட ஆடுகள் 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி

”தற்போது சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், கோயில்களில் தொடர்ந்து திருவிழாக்கள் நடக்கும். கோயில்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள், ஆட்டுக் கிடாய்களை வாங்கிச் செல்கின்றனர்” என வியாபாரிகள் இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

முன்னதாக பங்குனி மாதம் ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், தற்போது, சித்திரை மாதம் தொடங்கியுள்ளதால் ஆடுகள் விற்பனை சூடு பிடித்து, வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: 'பால் பாக்கெட்டுகளில் கரோனா விழிப்புணர்வு வாசகங்கள்!'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.