தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அயோத்தியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு வரலாற்று சிறப்புமிக்க ஏகமனதான தீர்ப்பு இன்றைக்கு வெளிவந்திருக்கிறது என்று தெரிவித்தார். அயோத்தியை மையமாக வைத்து இதுவரை இருந்த மனக்கசப்புகள் இன்றோடு முடிவடைந்து, இன்று முதல் புதிய தொடக்கமாக நல்லுறவு தொடர வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் பிரதமரைச் சந்தித்து தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னைகள் பற்றி பேசியதாகவும் தெரிவித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குபிறகும்கூட அரசு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருப்பாதவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் இருப்பதற்கு திமுதான் காரணம் என்றும் இனிவரும் காலத்தில் தேர்தல் நடப்பதற்கு ஆளும் கட்சி காரணமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், உள்ளாட்சியில் அதிமுக நல்லாட்சியினை ஏற்படுத்தும் எனவும் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அயோத்தி தீர்ப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினியின் கருத்து!