ETV Bharat / state

சிசிடிவியில் தோன்றிய வெள்ளை உருவம் - பேயா என்ற பீதியில் மக்கள்! - cctv footage of ghost

ஈரோடு: சோதனைச்சாவடியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சியில் வெள்ளையான ஒரு உருவம் தோன்றி பெரியதாக உருவெடுத்து காற்றில் மறையும் காட்சிகள் வெளியானதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திகில் சிசிடிவி காட்சி
திகில் சிசிடிவி காட்சி
author img

By

Published : Jun 14, 2020, 8:05 PM IST

பேய் இருக்கா இல்லையா என்பது இன்னும் அறிவியல் பூர்வமாக உறுதிபடுத்தப்படவில்லை. ஆனாலும் பலரும் பேய் இருக்கிறது என்பதை நம்பி வருவதுடன், அதன்மீது பெரும் அச்சத்தையும் கொண்டுள்ளனர். அவர்களின் நம்பிக்கைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக சிசிடிவி காட்சிகளில் சிறு உருவம் பறப்பது போன்ற காட்சிகள் அவ்வப்போது வெளியாகி அவர்களைத் திகிலூட்டும்.

அந்த வரிசையில், ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கருங்கல்பாளையம் சோதனைச்சாவடியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சி பேய் நம்பிக்கை கொண்டவர்களை அச்சமடைய வைத்துள்ளது. அந்த வீடியோவில், சாலையில் இருந்த சிமெண்ட் மூட்டையின் அருகில் தோன்றிய வெள்ளை நிறம் கொண்ட உருவம் ஒன்று சிறிதுசிறிதாக பெரிதாகி பின்னர் மறைந்துள்ளது. இந்தச் சோதனைச்சாவடி அருகே மின் மயானமும், சுடுகாடும் அமைந்துள்ளதால், அது ஏதோ ஒரு ஆவி தான் என்று நினைத்து அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

திகில் சிசிடிவி காட்சி

இது ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு சாரார் ”அது காற்றில் திடீரென்று கிளம்பிய புழுதிதான், பேயும் இல்ல ஒன்னும் இல்ல” என்று கூறுகின்றனர். ஒருவேளை வாகனங்களில் இருக்கும் கண்ணாடி மீது பட்ட ஒளியின் எதிரொலி கூட சிசிடிவியின் பதிவாகி இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'பேய் இருக்க பயமேன்' - ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.