ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், கால்நடை வளர்ப்பு உபதொழிலாக இருந்து வருகிறது. அங்குள்ள விவசாயிகள் ஆடுகளை மேய்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, வீட்டு அருகே பட்டி அமைத்து அதில் பாதுகாத்து வருகின்றனர்.
இந்நிலையில் பவானிசாகர் அடுத்த இக்கரைத் தத்தப்பள்ளியில் பவானி ஆற்றங்கரையோரம் உள்ள கிருண்ஷசாமி என்பவரின் ஆட்டுபட்டியில் இருந்த 13 ஆடுகள் காணாமல் போனது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து ரங்கன் என்பவரின் 2 ஆடுகள் மாயமானது. இதனால் அப்பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் நவநாகரிக உடை அணிந்து, சொகுசு காரில் வரும் கும்பல் ஒன்று ஆடுகளைத் திருடிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது ஆட்டிறைச்சி கிலோ ரூ.700க்கு விற்பனை செய்யப்படுவதால், அந்தக் கும்பல் நூதன முறையில் ஆடுகளைத் திருடிசெல்கின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் இதுகுறித்து விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பவானிசாகர் காவல்துறையினர், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:தருமபுரியில் கிணற்றில் மிதந்த பெண் சடலம்... போலீஸ் விசாரணை!