ETV Bharat / state

கூண்டு வைத்து சிறுத்தையைக் கண்காணிக்கும் வனத்துறையினர்! - கூண்டு வைத்து சிறுத்தையைக் கண்காணிக்கும் வனத்துறையினர்

ஈரோடு: தாளவாடி மலைப்பகுதியில் கல்குவாரியில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதையடுத்து, மூன்று கூண்டுகள் வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கூண்டு வைத்து சிறுத்தையைக் கண்காணிக்கும் வனத்துறையினர்

author img

By

Published : Dec 24, 2020, 10:30 AM IST

தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சூசையபுரம், தொட்டகாஜனூர், மெட்டல்வாடி, பீம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படாத கல்குவாரிகள் உள்ளன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் மலைக் கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொன்றுவிட்டு, பகல் நேரங்களில் செயல்படாத கல்குவாரிகளில் உள்ள புதர் மறைவில் சென்று பதுங்கிக் கொள்கின்றன.

இப்பகுதியில் முகாமிட்டிருக்கும் சிறுத்தைகள் தினமும் மலைக் கிராமங்களில் புகுந்து கால்நடைகளை அச்சுறுத்தி வருவதால் விவசாயிகள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர்.

கூண்டு வைத்து சிறுத்தையை கண்காணிக்கும் வனத்துறையினர்
சிறுத்தையைப் பிடிக்க கூண்டுகளை வைக்கும் வனத்துறையினர்

கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடிக்குமாறு, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, தாளவாடி, ஜீரகள்ளி வனத்துறையினர் மலைக் கிராமங்களில் செயல்படாத கல்குவாரிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து, அப்பகுதியில் மூன்று இடங்களில் சிறுத்தையைப் பிடிப்பதற்காகக் கூண்டுகளை வைத்து, தானியங்கி கேமரா பொருத்திக் கண்காணித்து வருகின்றனர்.

வனத்துறையினர் வைத்த கூண்டு
சிறுத்தையைப் பிடிக்க வைக்கப்பட்டுள்ள கூண்டு

செயல்படாத கல்குவாரி பகுதிகளிலுள்ள புதர்களை அகற்றி சுற்றிலும் கம்பி வேலி அமைக்குமாறு சத்தியமங்கலம் புலிகள் காப்பக அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, ஈரோடு ஆட்சியர் கதிரவன் செயல்படாத கல்குவாரி உரிமையாளர்களுக்குப் புதர்களைச் சுத்தப்படுத்தவும், சுற்றிலும் கம்பி வேலி அமைக்கவும் அறிவுறுத்துமாறு, ஈரோடு கனிமவளத்துறை இயக்குநருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து மூன்று கூண்டுகள் வைத்து சிறுத்தையைக் கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: : ஐந்து ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு - 70 வயது மூதாட்டி போன்று சிறுமியை ஆக்கிய கொடூரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.