ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சந்தனமரம் டிப்போ இரட்டை பூட்டு வனச்சரக அலுவலர் ராஜலிங்கம் (35). இவர் இரு சக்கர வாகனத்தில் சத்தியமங்கலத்தில் இருந்து புளியம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் செம்பகபுத்தூர் அருகே எதிரே வந்த மினி வேன் ஒன்று ராஜலிங்கத்தின் இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினர் மினி வேன் ஓட்டுநர் கணேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு நேரடி தேர்வில் வனச்சரக அலுவலராக தேர்வான ராஜலிங்கம், விளையாட்டு வீரருக்கான பல்வேறு பரிசுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய மருத்துவர் கைது!