ETV Bharat / state

உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் சோதனை - erode latest tamil news

ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் பள்ளிகள் அருகே செயல்படும் கடைகளில் காலாவதியான பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Erode food safety staff ride
food safety staff ride at Sathyamangalam
author img

By

Published : Feb 14, 2020, 1:27 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பள்ளிகள் அருகே செயல்படும் கடைகளில் கேடு விளைவிக்கக்கூடிய சிகரெட், பீடி, பான் பராக், புகையிலை மற்றும் காலாவதியான பிஸ்கட் விற்கப்படும் கடைகளில் சத்தியமங்கலம் வட்டாட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் 20க்கும் மேற்பட்ட கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 25 கிலோ சிகரெட், பீடி, புகையிலைகள், காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள், உணவுப் பண்டங்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் பள்ளி அருகே புகையிலைப் பொருட்கள் விற்பது சட்டப்படி குற்றம் என்றும் மீண்டும் இதே தவறு செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்தனர்,

உணவு பாதுகாப்பு துரை அலுவலர்கள் திடீர் சோதனை

அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தீயிட்டு எரித்தார்.

இதையும் படிங்க: ‘படிப்படியான மதுவிலக்கு என்ன ஆனது?’ - அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.