ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டாரத்தில் மல்லிகை, முல்லை, கோழிக்கொண்டை, சம்பங்கி பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. சுமார் 25,000 ஏக்கர் நிலப்பரப்பில் உற்பத்திசெய்யப்படும் பூ சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர் சங்கத்தில் ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது.
பல்வேறு இடங்களிலிருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகாவிலிருந்து வியாபாரிகள் முகாமிட்டு பூவை கொள்முதல் செய்தனர். ரூபாய் 50-க்கு விற்கப்பட்ட கோழிக்கொண்டை பூ தற்போது கிலோ ஆயிரமாக உயர்ந்துள்ளது. பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பங்கிப்பூ ரூபாய் 140 ஆக அதிகரித்துள்ளது. ரூபாய் 300-க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ தற்போது 1,500 ஆகும். 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லை 1000 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தீபாவளி பண்டிகையையொட்டி மைசூரு, பெங்களூரு, கேரளாவில் தேவை அதிகமாக இருப்பதால் பூ வரத்து குறைந்த நிலையில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சத்தியமங்கலத்தில் கொள்முதல்செய்யப்பட்ட பூ வேன், கார் மூலம் பெங்களூருவுக்கு விமானம் மூலம் டெல்லிக்கும் அனுப்பப்பட்டது.
இதையும் படிங்க... மலைச்சரிவை கட்டுப்படுத்தும் காட்டுச் சூரியகாந்தி பூக்கள்!