ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஜீரஹள்ளி, மரியபுரம் வனப்பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. உடனே அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் அவர்கள், அவிநாசியை சேர்ந்த பாலன்(29), அதே பகுதியை சேர்ந்த கவுதம்(22) மற்றும் நிகேஷ்(23) என்பது தெரியவந்தது. தற்போது அவர்கள் மூவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் வீதம் ரூ. 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி பழுது: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு