ETV Bharat / state

பெண் பயணிக்கு நெஞ்சுவலி... ஆம்புலன்ஸாக சீறிய அரசு பேருந்து... - அரசு பேருந்தில்

ஈரோட்டில் அரசு பேருந்தில் செல்லும்போது நெஞ்சு வலி ஏற்பட்ட பெண் பயணியை காக்க பேருந்திலேயே மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்த ஓட்டுனர், நடத்துனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

பெண் பயணிக்கு நெஞ்சுவலி; ஆம்புலன்ஸாக சீறிய அரசு பேருந்து

author img

By

Published : Sep 2, 2022, 12:14 PM IST

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கீழ்வானி‍, இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பவளக்கொடி (47). இவர் காட்டூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்து பணியினை முடித்துவிட்டு மதியம் சுமார் 1.30 மணி அளவில் காட்டூரில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக அந்தியூரில் இருந்து ஈரோடு செல்லும் 25A என்ற அரசு பேருந்தில் ஏறி உள்ளார்.

பேருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் பாட்டப்பன்கோவில் அருகே பவளக்கொடிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த பேருந்து ஓட்டுனர் சண்முகசுந்தரம், நடத்துனர் ராஜ்குமார் உடனடியாக பேருந்தை நிறுத்தி 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர்.

அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் அருகில் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஓட்டுநரும், நடத்துநரும் சிறிதும் காத்திருக்காமல் பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு அடுத்து வந்த பேருந்தில் அனுப்பி வைத்துவிட்டு அதே பேருந்திலேயே பவளக்கொடியை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர்.

அங்கு பவளக்கொடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நலமாக உள்ளார். உரிய நேரத்தில் அவரை காத்த அரசு பேருந்து ஓட்டுனர் சண்முகசுந்தரம் மற்றும் நடத்துனர் ராஜ்குமார் ஆகியோருக்கு பொதுமக்கள், பயணிகள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பின்னணி பாடகர் பம்பா பாக்யா காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.