ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் கூட்டம் கூட்டமாக பவானிசாகர் நீர்த்தேக்கப்பகுதிக்கு வந்து செல்லும்.
இந்நிலையில், தெங்குமரஹாடா வனம் அருகேயுள்ள குண்டுக்கல்பள்ளம் காட்டுப்பகுதியில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், அங்குள்ள ஓடையில் இறந்து கிடந்த 10 வயது மதிக்கத்தக்க பெண்யானையைக் கண்டறிந்தனர்.
தொடர்ந்து, யானையின் உடலைக் கைப்பற்றிய வனத்துறையினர், அதே இடத்தில் உடற்கூராய்வு மேற்கொண்டனர். ஆய்வில் யானை குடற்புழு நோயால் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, அதன் உடல் அதே பகுதியில் பிற விலங்குகளுக்கு உணவாக விடப்பட்டது. மேலும், யானைகளுக்கு குடற்புழு நோயை குணப்படுத்தும் வகையில் நீர் நிலைகளில் உப்புக்கட்டி வைக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தொடரும் வனவிலங்குகளின் மரணம்!