ETV Bharat / state

பவானிசாகர் வனத்தில் பெண் யானை உயிரிழப்பு - பெண்யானையின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு

ஈரோடு பவானிசாகர் வனப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த 15 வயது பெண் யானையின் உடலை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

பவானிசாகர் வனத்தில் பெண் யானை மர்மச்சாவு

author img

By

Published : Dec 4, 2022, 10:56 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வன அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பவானிசாகர் வனச்சரகம் அலுவலர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு, கொத்தமங்கலம் காப்புக்காட்டில் 15 வயதுள்ள பெண் யானை உயிரிழந்துள்ளது தெரியவந்தது. யானையின் உடலை ஆய்வு செய்ததில் யானை இறந்து 2 நாள்கள் ஆனது தெரியவந்தது. அதே இடத்தில் உடற்கூராய்வு செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் கால்நடை மருத்துவர் இல்லாத காரணத்தால் உடற்கூராய்வு திங்கள்கிழமை தள்ளிவைக்கப்பட்டது. உடற்கூராய்வுக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:பயன்பாட்டுக்கு வந்தது அதிநவீன கார் பார்க்கிங்.. கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.