325 லி சாராய ஊறல் கண்டுபிடிப்பு
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள குரும்பப்பாளையம் கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் சுப்புரத்தினம் தலைமையிலான காவல் துறையினர், குரும்பபாளையம் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள தனியார் கிரஷர் அருகே முள்புதர் காட்டில் இரண்டு பேரல்களில் சுமார் 325 லிட்டர் சாராய ஊறல் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
தந்தை மகன் கைது
விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள், குரும்பபாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (47), அவரது மகன்கள் சிவக்குமார் (28), அஜீத்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கைதுசெய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து இரண்டு பேரலில் 325 லிட்டர் சாராய ஊறல், இரண்டு லிட்டர் சாராயம் பறிமுதல்செய்யப்பட்டது. இந்தச் சாராய ஊறலை கீழே கொட்டி காவல் துறையினர் அழித்தனர்.
இதையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, சத்தியமங்கலம் நீதிமன்றம் முன்னிறுத்தி, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரூ.7000 கையூட்டு: வேலைக்கு வேட்டு