ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகர், தொட்டமபாளையம், கொடிவேரி, அய்யம்பாளையம், சிக்கரசம்பாளையம், பெரியகுளம் புதுவடவள்ளி ஆகிய இடங்களில் அதிக அளவில் வாழைப் பயிரிடப்பட்டுள்ளன. அதில் நேந்திரன், செவ்வாழை, கதலி, ஜி 9 உள்ளிட்ட வாழைப்பழ ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
தற்போது வாழைகள் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகின்றன. வெட்டுக்கிளி படையெடுப்பு தற்போது வேகமாகப் பரவி வருகிறது. வெட்டுக்கிளி தமிழ்நாட்டில் வராத நிலையில், முன்னெச்சரிக்கையாக வாழைத்தாருக்கு எளிதில் காற்றுப்புகும் படியான கம்பளித் துணியுறை போடப்படுகிறது.
இந்த உறை போடுவதால் வெயிலில் இருந்து வாழைத்தாரைக் காப்பாற்றவும்; பூச்சிகள், வெட்டுக்கிளிகள், பறவைகள் ஆகியவற்றிலிருந்து சேதத்தைத் தடுக்கவும் இயலும்.
ஒரு துணியுறை போடுவதற்கு ரூ.12 வரை செலவானாலும் வாழைத்தாரை சேதமின்றி, கூடுதல் விலைக்கு விற்கலாம் என விவசாயிகள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
வாழைத்தார்களில் துணியுறையைப் பொருத்தும் கருவி கிடைக்காததால், விவசாயிகள் ஏணி வைத்து பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தற்போது புதிய முயற்சியாக இருப்பதால், இதனைத் தொடர்ந்து செயல்படுத்துவது, அதில் கிடைக்கும் பலனைப் பொறுத்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குதிரைக்கு வந்த சோதனை... சிவப்பு மண்டலத்திலிருந்து வந்ததால் ‘ஹோம் குவாரண்டைன்’