ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் தக்காளியை விவசாயிகளிடமிருந்து கொள்முதல்செய்து வியாபாரிகள் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், பாலக்காடு, திருச்சூர் உள்ளிட்ட கேரள மாநிலப் பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பிவருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு தக்காளி கொள்முதல் விலை ஆறு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்துவந்த நிலையில், தற்போது தொடர்ச்சியாக மழை பெய்துவருவதால் விளைச்சல் குறைந்துள்ளது.
இதன் காரணமாக தக்காளி தேவை அதிகரித்துள்ளதால் கொள்முதல் விலை உயர்ந்து தற்போது விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய்க்கு கொள்முதல் செய்கின்றனர். இதன் காரணமாக தினசரி காய்கறி மார்க்கெட், சில்லறை விற்பனை கடைகளில் பொதுமக்களுக்கு தக்காளி ஒரு கிலோ ரூபாய் 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்: விவசாயிகள் வேதனை!