ETV Bharat / state

மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு! - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: சத்தியமங்கலம் அருகே மாடு மேய்க்கச் சென்ற விவசாயியை யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாடு மேய்க்கச் சென்ற விவசாயி யானை தாக்கி உயிரிழப்பு!
Elephant killed a man
author img

By

Published : Aug 16, 2020, 3:04 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனப்பகுதியைச் சேர்ந்தவர் சிக்கண்ணா(65). இவர், தனது வீட்டில் ஆடு, மாடுகள் வளர்த்துள்ளார்.

இந்நிலையில், இன்று பெரியகாரை என்ற வனப்பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற சிக்கண்ணா, வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர்.

அப்போது, அவர் மேய்ச்சலுக்காக சென்ற இடத்திலுள்ள மரத்தடியில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் அருகே சென்று பார்த்தபோது, அவர் யானை தாக்கியதில் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, வனத் துறை, காவல் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள், அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், யானையின் தாக்குதலை கட்டுப்படுத்த வனத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.