ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் தலமலை ஆகிய பகுதிகளில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்படுகிறது.
கடைசியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு முட்டைகோஸ் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால் உழவர்கள் மூன்று மாத பயிரான முட்டைக்கோஸ் சாகுபடி செய்தனர்.
இதன் காரணமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் முட்டைக்கோஸ் சாகுபடி அனைத்து கிராமங்களில் செய்யப்பட்டது. அண்மையில் பெய்த மழை காரணமாக முட்டைக்கோஸ் பயிரில் அழுகல் நோய் ஏற்பட்டதால் அதன் தரம் குறைந்து விலை சரிந்தது.
சில மாதங்களுக்கு முன்பு அதிகபட்சமாக கிலோ 23 ரூபாய்க்கு விற்கப்பட்ட முட்டைகோஸ் தற்போது கிலோ மூன்று ரூபாய்க்கு கொள்முதல்செய்யப்படுகிறது.
இதனால் உழவர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். ஏக்கர் ஒன்றுக்கு 40,000 முதல் 50,000 வரை உற்பத்தி செலவான நிலையில் தற்போது வருவாய் ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை மட்டுமே கிடைப்பதால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
எனவே அரசு முட்டைகோஸ் உழவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.