ETV Bharat / state

அலட்சியத்தால் அதிகரித்த உயிரிழப்பு: ஈரோடு காவல் துறை எடுத்த அதிரடி நடவடிக்கை! - Traffic Police

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுவதால் ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தலைக்கவசம் அணியாதோருக்கு நேற்று முதல் அங்கு அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.

ஹெல்மெட் கட்டாயம்
ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாவிட்டால் இன்று முதல் அபராதம்
author img

By

Published : Oct 14, 2021, 8:49 AM IST

ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் சத்தியமங்கலத்தில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் பணியில் காவல் துறை தீவிரமாகக் களம் இறங்கியுள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுக்க இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவு உள்ள நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் அலட்சியம் காட்டுவதால் ஈரோடு மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

அதிகரிக்கும் உயிரிழப்புகளைத் தடுக்க

ஈரோடு மாவட்டத்தில் விபத்தில் உயிரிழப்புகளைத் தடுக்க இன்றுமுதல் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து இன்று சத்தியமங்கலம் பகுதியில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவல் துறை தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகளைத் தடுத்து நிறுத்தி கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியதோடு தலைக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்து கையடக்க கருவி மூலம் ரசீது வழங்கினர்.

தொடர்ந்து தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் எச்சரித்து அனுப்பிவைத்தனர். தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் காவல் துறை அபராதம் விதிக்கும் தகவலறிந்த மற்ற வாகன ஓட்டிகள் காவல் துறை வாகன தணிக்கையில் உள்ள சாலையில் செல்லாமல் மாற்றுச் சாலைகளைப் பயன்படுத்தி அபராதத்திலிருந்து தப்பினர்.

இதையும் படிங்க: பண்டிகை கால தொடா் விடுமுறை: உள்நாட்டு விமான சேவை டிக்கெட் கட்டணம் உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.