ஈரோடு: கள்ளிப்பட்டி அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காமராஜர் அறக்கட்டளை தொடக்க விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஒன்றிய முன்னாள் அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.
அப்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது, "தமிழ்நாடு மக்கள் மோடியை எதிர்த்ததுபோல மற்ற மாநிலங்களின் மக்களும் அவரை எதிர்க்கும் காலம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் யாரும் மனம் தளராமல் உற்சாகமாக இருக்க வேண்டும். காமராஜர் ஆட்சியைச் செய்கின்றோம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைந்துள்ளது.
மு.க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதிலிருந்து மக்களுக்காக ஓய்வின்றி உழைக்கிறார். அது மட்டுமல்லாமல் மோடி ஆட்சியைக் கடுமையாக எதிர்த்துவருகிறார்" என்றார்.
இதையும் படிங்க: உசிலம்பட்டி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் - மு.க. ஸ்டாலின்