ஈரோடு: தேனி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் தர்மமும், நியாயமும் வென்றுள்ளதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு வாய்ப்பு அளிக்கபட்டது. இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த தேர்தலில் அளவுக்கு மீறிய அத்துமீறல்கள், பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி தமிழக அளவில் பெரும் தோல்வியை சந்தித்தாலும் தேனி தொகுதியில் மட்டும் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் அமோக வெற்றிப்பெற்று இருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் எம்பியாக பதவி வகித்து வந்தார்.
இதையும் படிங்க: O.P.Ravindranath: தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
இந்த தேர்தலில் அவர் தனது சொத்து மதிப்புகள் குறித்த விபரங்களை குறைவாக மதிப்பீட்டு காட்டியதாக கூறி, தேனி நாடாளுமன்ற தொகுதியின் வாக்களரான மிலானி என்பவர் சென்னை உயர்நிதிமன்றத்தில் அஇஅதிமுக வேட்பாளர் எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லதாது என்று அறிவிக்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று (ஜூலை 6) தீர்ப்பு வழங்கபட்டது. இந்த தீர்ப்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் 2019 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கபட்டது.
இந்த தீர்ப்பு குறித்து பேசிய செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன், "இந்த தீர்ப்பு காலம் தாழ்ந்து வந்தாலும் தர்மமும் நியாயமும் வென்று உள்ளதாகவும், தேர்தலின் போது பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் அளித்தும் மாவட்ட ஆட்சியராகவும் தேர்தல் அலுவலராகவும் இருந்த பெண் அதிகாரி அதற்கு துணையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார். மேலும், நீதிமன்றத்தில் இந்த வழக்கைப் போட்ட வாக்காளருக்கு எனது நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.
ஓ.பி.ரவீந்திரநாத் தரப்பில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், கோரிக்கையை ஏற்ற நீதிபதி, மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்ததுடன், தீர்ப்பை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாகவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் சட்ட பரிசீலனையில் உள்ளது: ஆளுநர் மாளிகை விளக்கம்!