ETV Bharat / state

‘கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கை இழந்துள்ளது’ - ஈஸ்வரன் - ஈஸ்வரன்

ஈரோடு: மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக ஒரு தொகுதியை கூட கைபற்றாதது அப்பகுதியில் அதிமுக தனது செல்வாக்கை இழந்திருப்பதை காட்டுவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளா் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஈஸ்வரன்
author img

By

Published : May 26, 2019, 9:53 PM IST

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சிமன்ற குழுக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளா் ஈஸ்வரன் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது அவர், "இந்த தோ்தலில் கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தெளிவான முடிவை எடுத்துள்ளனர். ஆளும் கட்சி தமிழ்நாட்டில் வெற்றி பெறாதது மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தைக் காட்டுகிறது.

கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்கை இழந்துள்ளது

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அநாகரிகமான முறையில் பேசுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேர்தல் மூலம் மக்கள் பாடம் புகட்டுவார்கள். 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக மக்களவை உறுப்பினர்களுடன் இம்முறை வெற்றி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஒப்பிடக் கூடாது.

இம்முறை திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற அனைவரும் திறமையுள்ளவர்கள். கொங்கு பகுதியில் அதிமுக தன் பலத்தை இழந்து வருவது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. திமுக கூட்டணியோடு உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்" என்றார்.

ஈரோடு 26.05.2019 
சதாசிவம்

கொங்கு மண்டலத்தில்   பெரும் பலத்துடன் வலம்வந்த அதிமுக தற்போது நடைபெற்ற தோ்தலில் ஒரு இடத்தைக்கூட பெறாத நிலையில் தன் பலத்தை இழந்துள்ளது எனநிருபணம் ஆகியுள்தாகவும் உள்ளாட்சி தோ்தலிலும் திமுக கூட்டணியில் தொடருவோம் என்றும்  கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளா் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்... 
                    
ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சிமன்ற குழுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளா் ஈஸ்வரன் செய்தியாளா்கள் சந்திப்பின் போது. இந்த தோ்தலில் கொங்கு மண்டலத்தில் அனைத்து தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது மக்கள் தெளிவான முடிவை கொடுத்துள்ளாா். முதல் முறையாக கொமதேகவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பிரை தேர்ந்தெடுத்துள்ள மக்களுக்கு நன்றி ஆளும் கட்சி தமிழகத்தில் வெற்றி பெறதாதது மத்தியில் மட்டும் இல்லை மாநில அரசு மீதும் மக்கள் கோபத்தை காட்டுகிறது மத்திய அரசுடன் தமிழகத்திற்கான உரிமமையை கேட்டு பெற அதிமுக தவறிவிட்டது இதுவே இம்முறை நடைபெற்ற மிகபெரிய தோல்வியை சந்தித்தது அதிமுக கூட்டணி வாங்கிய வாக்குகள் மிக சொற்ப அளவில் வாங்கி உள்ளனர் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அநாகரிக முறையில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.இல்லையெனில் தேர்தல் மூலம் மக்கள் பாடம் புகட்டுவார்கள் நிரூபணாகியுள்ளது தமிழகத்தில் இருந்து கடந்த முறை சென்ற 37அதிமுக பாரளுமன்ற உறுப்பினர்களுடன் இம்முறை வெற்றி பெற்ற 37உறுப்பிணர்களை ஒப்பிட்டு பேசக்கூடாது அதிமுகவோடு பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வைக்க அழுத்தம் கொடுத்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று 37 அதிமுக பாரளுமன்ற உறுப்பினர்கள் பாரத பிரதமரை ஒரு முறை கூட சந்திக்கவில்லை
இம்முறை திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற அனைவரும் திறமைசாலிகள் பணப்பட்டுவாடா என்பது புதிது ஒன்றும் இல்லை தேனி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது அனைவருக்கும் சந்தேகம் உள்ளது ஆகவே ஈவிகேஎஸ் இளங்கோவன் சொல்லும் குற்றச்சாட்டில் உன்மை உள்ளது கொங்கு பகுதியில் அதிமுக தன் பலத்தை இழந்து வருவது என்பது நிரூபணம் ஆகி உள்ளது உள்ளாட்சி தேர்தலில் அதிமுக நடத்துவார்கள் என்பது சந்தேகமாக உள்ளது, திமுக கூட்டணியோடு உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் என்று தொிவித்தாா்...

Visual send mojo live 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.