ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மூலப்பாளையத்தை சேர்ந்த 33 வயது நபர் கரோனா தொற்று ஏற்பட்டு, பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த நபரை வெண்டிபாளையம் கல்லறை தோட்டத்தில் புதைக்க மாநகராட்சி ஊழியர்கள் கொண்டுசென்றனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதால் தங்களுக்கும் கரோனா பரவிடும் என்று கூறி சடலத்தைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
கரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தைப் புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு! - ஈரோடு வெண்டிபாளையம் கரோனா செய்திகள்
ஈரோடு: வெண்டிபாளையத்தில் உள்ள கல்லறை தோட்டம் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.