ETV Bharat / state

பள்ளிக்குச் செல்லாமல் ஊர் ஊராக சுற்றித் திரிந்த மாணவர்: பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்! - ஈரோடு மாணவன் மாயம்

ஈரோடு: பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் ஊர் ஊராக சுற்றித் திரிந்த மாணவரை காவல்துறையினர் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

erode student missing case
erode student missing case
author img

By

Published : Feb 21, 2021, 9:45 AM IST

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள சாணார்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி பொன்னுசாமி. இவரது 17 வயது மகன் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக விடுமுறை விடப்பட்ட நிலையில் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பு நடைபெற்றதால் அதில் படித்து வந்தார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 11ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதையடுத்து அவர் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர் வீட்டில் இருந்து மாயமானார். அவரது தந்தை பொன்னுசாமி அக்கம்பக்கம், உறவினர் வீடுகளில் தேடி பார்த்து கண்டுபிடிக்க முடியாததால் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் மகன் காணவில்லை என புகார் அளித்தார்.

இதையடுத்து, காவல்துறையினர் அவர் ஆன்லைன் வகுப்புக்கு பயன்படுத்திய செல்போன் எண்ணை டிராக் செய்து பார்த்தபோது அவர் பழனியில் இருந்தது தெரியவந்தது. போனில் தொடர்புகொண்டு காவல்துறையினர் பேசியபோது, பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லாததால் வீட்டில் இருந்த பணம் ரூபாய் 2 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கோவை, திண்டுக்கல், பழனி சென்றதாக மாணவன் நவீன்குமார் தெரிவித்துள்ளார்.

பின்னர், அவர் நேற்று (பிப்.20) புஞ்சைபுளியம்பட்டி வந்து சேர்ந்தார். இதையடுத்து காவல்துறையினர் அவருக்கு அறிவுரை கூறி அவரது தந்தை பொன்னுசாமியுடன் அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க:

பட்டப்பகலில் இளைஞரை வெட்டும் கும்பல் - நெல்லையில் திக்... திக்...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.