ETV Bharat / state

சூடுபிடித்தது உள்ளாட்சித் தேர்தல் - மேளதாளத்துடன் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: சென்னிமலை அருகே ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த இருவர் மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்து வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

admk candidate
admk candidate
author img

By

Published : Dec 11, 2019, 10:17 PM IST

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மாவட்டங்களிலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்பு மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய அலுவலகத்திலும் மாவட்ட ஊராட்சி வார்டுகள், சிற்றூராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் மூன்றாவது நாளாக பெற்றுக் கொள்ளப்படுகிறது.

வேட்பு மனுவை தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்
வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும், ஓட்டப்பாறையூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும் அதிமுகவைச் சேர்ந்த நாகராஜன், தங்கவேல் ஆகிய இருவரும் தங்களது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினர்.

அதேபோல் பவானி, அம்மாபேட்டை, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக பொதுமக்களுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்த இருவரும், தியாகி திருப்பூர் குமரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வேட்புமனுவைப் பெற்றுக் கொண்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள விபரங்கள், வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் தன்மை குறித்து வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் முன்னிலையில் சரி பார்த்த பின்னரே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மேள தாளத்துடன் வரும் வேட்பாளர்கள்

உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளதையடுத்து தேர்தலுக்கான வேட்பு மனு அளிக்க வேட்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாகும்'

Intro:ஈரோடு ஆனந்த்
டிச11

சூடுபிடித்தது உள்ளாட்சி தேர்தல் : மேளதாளத்துடன் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இரு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த இருவர் மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் மாவட்டங்களிலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி வார்டுகள், சிற்றூராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்புமனுக்கள் பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் மூன்றாவது நாளாக பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்த முகாசிபிடாரியூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஓட்டப்பாறையூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் அதிமுகவை சேர்ந்த நாகராஜன் மற்றும் தங்கவேல் ஆகிய இருவரும் தங்களது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினர்.

அதேபோல் பவானி, அம்மாபேட்டை, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக பொதுமக்களுடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்த இருவரும் தியாகி திருப்பூர் குமரனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வேட்புமனுவைப் பெற்றுக் கொண்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இடம்பெற்றுள்ள விபரங்கள், வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் தன்மை குறித்து வேட்பாளர் மற்றும் முன்மொழிபவர் முன்னிலையில் சரி பார்க்கப்பட்டது.

Body:வேட்புமனு சரி பார்க்கப்பட்டதையடுத்து வேட்புமனுக்கான வைப்புத் தொகை வேட்பாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டு இறுதியாக வேட்பாளரிடமிருந்து வேட்புமனுக்கான உறுதிமொழியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Conclusion:உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளதை அடுத்து தேர்தலுக்கான வேட்புமனு அளிக்க வேட்பாளர்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.