ஈரோடு மாவட்டம், செங்கோடபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி 20 நாட்கள் நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன்பகவத் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு அமைப்பின் முக்கியத்துவம் மற்றும் கடந்து வந்த பாதைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
முகாமின் நிறைவு நாளான நேற்று ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் யோகா, காரத்தே, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைகளை செய்து காட்டினர். இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.