ETV Bharat / state

ஆதரவற்ற முதியவருக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு!

ஈரோடு: ஆதரவின்றி சாலையில் வசித்துவந்த மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அழைத்துச் சென்று மருந்துவமனையில் சேர்த்து உதவிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.

முதியவர்
author img

By

Published : May 11, 2019, 3:53 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி பகுதியில் 65 வயது மிக்க, மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் சுமார் இரண்டு மாதங்களாக சாலையோரம் வசித்து வந்துள்ளார். ஆதரவளிக்க யாரும் இல்லாத நிலையில், கிழிந்த உடையுடன் சுற்றிவந்த அவரைக் கண்ட தாளவாடி பகுதியைச் சேரந்த 108 ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் குரு, அந்தோனிராஜ், இளையராஜா, நாகராஜ் ஆகியோர், மாற்று உடை வாங்கிக் கொடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்தவமனையில் உள்ள அந்த முதியவருக்கு தற்போது போதிய சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் நிலையில், இந்த தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் இந்த இளைஞர்களின் நல்ல மனதை பாராட்டி புகழ்ந்து வருகின்றனர்.

ஆதரவற்றவருக்கு உதவியதால் தாளவாடி யில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு:    

டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

TN_ERD_SATHY_04_AMBULANCE STAFF_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது )

தாளவாடி யில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி பகுதியில்  65 வயதுள்ள மனநலம் பாதிக்கப்பட ஓருவர்  கிழிந்த உடை, தாடியுடன்  சுற்றி திரிந்துள்ளார். தாளவாடி சாலை ஓரங்களில் படுத்து கொள்வதும் ரோடுகளில் பசியோடு கிழிந்த உடையுடன் சுற்றி திரிவதும்  கடந்த 2 மாதமாக இருந்துள்ளார். அந்த நபரை பற்றி எவரும் கவலைப்படவில்லை. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அவரை பற்றி விசாரித்தனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்ட, ஆதரவற்ற நபர் என்பதை தெரிந்துக்கொண்ட  தாளவாடி 108  ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குரு, அந்தோனிராஜ், இளையராஜா, நாகராஜ் ஆகியோர்  அந்த நபரை அழைத்து சென்று  கிழிந்த ஆடைகளை எல்லாம் அப்புறபடுத்தி அந்த நபரை குளிக்க வைத்து புதிய உடைகள் அணிவித்து மருத்துவமனையில் சேர்த்தனர்.  அவருக்கு அங்கு போதிய சிகிச்சை அளித்து வருகிறது. மேலும் அவரது மேல் சிகிச்சைக்காவும் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். கடந்த 2 மாதமாக மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றி திரிந்த நபரை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் அவரை மீட்டு சுத்தம் செய்து சிகிச்சை அளித்ததை  பொதுமக்கள் பாராடினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.