கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி சோதனை சாவடியில் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து பொருட்கள், காய்கறி, பால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.
அவற்றில், மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் வாகனங்களுக்கு கிருமி நாசினி, உடல் வெப்பநிலை கண்டறியும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அங்கு வரும் சுற்றுலா வாகனங்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பபட்டு வருகிறது. இரு மாநிலத்திற்கும் சென்றுவரும் அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதையும் படிங்க: எல்லையில் கர்நாடக வாகனங்கள் திருப்பி அனுப்பிவைப்பு!