ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையம் பகுதியில் உள்ளது ஸ்ரீ சமயபுரத்து மாரியம்மன் கோயில். இந்த கோயிலில் கடந்த 23ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி விழா இன்று நடைபெற்றது. இதில் சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தீயில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இந்த விழாவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.