ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானியிலுள்ள ஜீவா நகரைச் சேர்ந்த விஜயா (40), சண்முகம் தம்பதியினர் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 6) காலை இருவரும் வேலைக்கு சென்றுவிட, திடீரென நேற்று மதியம் இவர்களின் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும், வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: பட்டப்பகலில் சைக்கிள் திருடும் இளைஞர்கள்!