ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கமும் இணைந்து பாஜக அரசைக் கண்டித்தும், தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், விவசாய தொழிலாளர்களுக்கான சமூகப்பாதுகாப்பு வேண்டியும், விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலையைத் தீர்மானிக்க வேண்டியும், தியாகிகள் தினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் நான்கு நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு அளித்திருந்தனர்.
ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட விவசாய அமைப்பைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேருந்து நிலையத்தில் ஒன்று கூடியபோது கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் அவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றும் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
குமரியில் குளத்தை சுத்தம் செய்த நாம் தமிழர் கட்சியினர்!
அதற்கு காவல் ஆய்வாளர், தேசிய குடியுரிமைச் சட்டத்தையும், தேசிய குடிமகனின் பதிவேடுச் சட்டத்தையும் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால், அதற்கு அனுமதியளிக்கக்கூடாது என்றும், மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அவர்களைக் கைது செய்து 15 நாள்கள் காவலில் சிறையில் அடைக்கவேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.
10 ரூபாயில் ஒரு நாள் சுற்றுலா: திருச்சியில் அறிமுகம்
அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள், பிற மாவட்டங்களில் அனுமதி அளிக்கும் போது ஈரோட்டில் மட்டும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எந்தவொரு அரசு எதிர்ப்புப் பதிவிற்கும் அனுமதி வழங்குவதில்லை என்றும்; அதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
மேலும் முறைப்படி அனுமதி பெற்றபின்னர் போராட்டத்தை நடத்திக்கொள்கிறோம் என்றும்; காவல் துறைக்கு கண்டனத்தைப் பதிவு செய்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.