ETV Bharat / state

சிறுமியை பாலியல் வன்கொடுமை முயற்சி - போக்சோவில் முதியவர் கைது - Erode Pocso

ஈரோடு: ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை முயற்சி செய்த 70 வயது முதியவரை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோவில் முதியவர் கைது
போக்சோவில் முதியவர் கைது
author img

By

Published : Mar 17, 2020, 8:42 PM IST

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முதியவர் மாரியப்பன் (70). இவர் குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற நான்காம் வகுப்பு சிறுமியை முதியவர் விளையாடுவதுபோல் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை முயற்சி செய்துள்ளார். பெற்றோர்கள் சிறுமியை பள்ளி முழுவதும் தேடும்போது அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது.

போக்சோவில் முதியவர் கைது

உடனே அங்கு சென்று அவர்கள் பார்த்தபோது இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறுமியை மீட்ட பெற்றோர், முதியவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் முதியவரை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.