தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பவானிசாகர் சட்டப்பேரவை தொகுதியில், திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல்.சுந்தரம் போட்டியிடுகிறார்.
திமுக கூட்டணி வேட்பாளரான பி.எல்.சுந்தரம் தனது கூட்டணி கட்சியினருடன் கிராமங்கள்தோறும் வாக்கு சேகரித்து வருகிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர். இவர் பொன்மேடு, நொச்சி குட்டை, ஆலாம் பாளையம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நூறு நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும். கரோனா நிவாரணமாக 4000 ரூபாயும், முதியோர் உதவித் தொகை ரூபாய் 1500ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இப்பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்படும்” என உறுதியளித்தார்.
மேலும் திமுக கூட்டணிக்கும், அதிமுகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுவதால் வாக்காளர்களை கவர திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்து வருகின்றார்.
இதையும் படிங்க: 'திமுக குறித்து பேசக்கூடாது!' - நாம் தமிழர் கட்சியினர் மீது திமுக தாக்குதல்