சத்தியமங்கலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் விஜயகுமார், முத்துக்குமார் ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம் கோலாம்பூர் மாவட்டத்தில் கண்ணாடி பாரம் ஏற்றிவிட்டு வீடு திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களைப் போன்று, தமிழ்நாட்டைச் சேர்ந்த 48 பேர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். பொது ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்களான விஜயகுமார், முத்துக்குமார் ஆகிய இருவரும் சத்தியமங்கலம் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர், இவர்கள் தமிழ்நாடு திரும்ப கோலாம்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார். கடந்த 8ஆம் தேதி மூன்று வாகனங்களில் புறப்பட்ட 50 பேர் நேற்று (மே.10) மாலை ஈரோடு வந்து சேர்ந்தனர்.
இதில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரும், திருச்சி, நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 41 பேரும் அவர்களது சொந்த மாவட்டங்களுககு அனுப்பி வைக்கப்பட்டனர். ஈரோடு வந்தவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
![பேருந்தில் அழைத்துவரப்பட்ட தமிழர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-erd-04-sathy-maharastrta-retrurn-photo-tn10009_10052020171908_1005f_1589111348_83.jpg)
மேலும், தமிழ்நாடு திரும்ப உதவி செய்த அம்மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவிற்கு லாரி ஓட்டுநர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவலர்களே சட்டவிரோதமாக மது விற்பனை